Kinky Fetishes Sex Porn Videos scat porn
செய்திகள்தமிழ் செய்திகள்பொக்கிஷம்

டி.எம்.சௌந்தரராஜன் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்…!

டி.எம்.சௌந்தரராஜன் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்….{25-5-2018}….சில சுவையான நினைவுகள்…

டி.எம்.எஸ்…. மூன்றெழுத்து மந்திரச்சொல் ….தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்: தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய ஒரே பாட்டுத் தலைவன்…..

டி.எம்.எஸ். என்பதில் உள்ள `

`டி’ என்பது அவரின் குடும்பப் பெயர் `தொகுளுவா’, கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!

எம்’ என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்.

எஸ்’ என்றால், செளந்தரராஜன்:

டி.எம்.எஸ்- ஸீக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை.

தியாகராஜ பாகவதர் (டி),

மதுரை சோமு (எம்),

கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர,

தியாகைய்யர் (டி),

முத்துசாமி தீட்சிதர் (எம்),

சியாமா சாஸ்திரிகள் (எஸ்)
ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்! 

பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். `இல்லாட்ட ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! `பாவம், டி.எம்.எஸ்ஸீக்கு என்ன கஷ்டமோ!ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு’ என்பார்!

நீராரும் கடலுடுத்த..’ என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், `ஜன கண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன் வராத நிலையில் டி.எம்.எஸ்ஸீம் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!வசந்தமாளிகை’ படத்தில் வரும் `யாருக்காக’ பாடலை பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். `அதெல்லாம் வீண் வேலை’ என்று தயாரிப்பாளர் மறுத்துவிட `எக்கோ எஃபெக்ட்’ வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்!

`அடிமை பெண்’ படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். `பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு. அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது. அந்தப் பாடல்தான். `ஆயிரம் நிலவே வா!’

காஞ்சிப் பெரியவர். புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை `கற்பகவல்லி’பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்!

 எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி ஜெயலலிதா என அனைவைரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!

`பாகப் பிரிவினை’ படத்தின் 100- வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ். விழாவில் `கடவுள் வாழ்த்து’ பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன!

தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.(அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.) 

{கீழே உள்ள புகைப்படத்தில்…மேஜர்தாசன்-டி.எம்.சௌந்தர்ராஜன்-இளையராஜா-டி.எம்.எஸ்.தொடரின் இயக்குநர் விஜயராஜ்.}

திரைப்படக் கல்லூரி மாணவர் விஜயராஜ் என்பவர் டி .எம்.எஸ்.அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவருடனேயே தொடர்ந்து பத்து வருடங்கள் பயணித்து..”இமயத்துடன்” என்ற பெயரில் தொடராக (வீடியோ)பதிவு செய்துள்ளார்.இத்தொடரில் அவரோடு சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பெற்று பேசியிருக்கிறார்கள் .{ஆரம்பம் முதல் இறுதி வரை டி .எம்.எஸ்.தொடருக்கு உதவி செய்த பாக்கியம் எமக்கு கிட்டியது.} இத்தொடரின் மூலம் நீண்ட வருடங்களாக பிரிந்திருந்த இளையராஜா…,டி.ராஜேந்தர்…போன்றவர்கள் இணைந்து மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தார்கள்.இது போல் ஏராளமான சுவையான தகவல்கள்…பாடல் காட்சிகள்…இத்தொடரில் இடம் பெற்றுள்ளன.மிக விரைவில் பிரபலமான தொலைக்காட்சியில் “இமயத்துடன்”என்ற டி.எம்.எஸ்.இன் தொடர் வரவுள்ளது.  

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close