எம்.ஜி.ஆர்செய்திகள்தமிழ் செய்திகள்பொக்கிஷம்

மக்களின் முதல்வர்….எம்..ஜி.ஆர்.!! ..

மக்களின் முதல்வர்…எம்..ஜி.ஆர்.!! 

தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல், ஒரு பொதுக்கூட்டத்திற்காக மதுரை சென்று திரும்பும் வழியில் அருகே உள்ள சோழவந்தான் கிராமத்திற்கு வந்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்தார்…

அப்போது, சற்று தொலைவில் வயலில் நாற்று நட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு வயதான பெண்மணியைப் பார்த்து அதிர்ச்சியற்ற மக்கள்திலகம், கடகடவென்று வரப்பில் நடந்து அப்பெண்மணிக்கு அருகே செல்கிறார்…

எம்ஜிஆரைப் பார்த்து பிரமித்த அப்பெண்மணி அதிர்ச்சியுற்று நிற்க…!!!

எம்ஜிஆர் கண்களில் நீருடன் கேட்கிறார்… “என்னம்மா இது? உங்களுக்கா இந்த நிலை ? இந்த வயசான காலத்துல ஏன் இப்படி கூலி வேலை செஞ்சு கஷ்டப்படறீங்க.??? …

அந்த வயதான தாய் பொங்கிவரும் கண்ணீரை அடக்கமுடியாமல் தன் குடும்ப நிலையைக் கூறியதும் அப்பெண்மணியின் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறார்…”அம்மா! உங்க மகன் நானிருக்கும் போது, இப்படி நீங்க கஷ்டப்படலாமா!!! இதுக்கு சீக்கிரமே ஒரு வழி செய்யறேன்…” ன்னு கிளம்பிட்டார்.

அப்பெண்மணி வேறு யாருமல்ல…

நான்கு முறை காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்த பொன்னம்மாள் தான் அவர்…

அடுத்த சிறிது நாட்களிலேயே
எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதிய திட்டம” வழங்க அரசாணை பிறப்பித்தார்.

கட்சிப் பாகுபாடின்றி
மக்களின் குறைகளை தான் நேரடியாகவே சென்றறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் மக்கள்திலகம் ஒருவரே

Image may contain: 1 person, smiling, sunglasses, hat and closeup
Image may contain: 1 person, standing
Image may contain: one or more people and text


..

Tags
Show More

Related Articles

Close