இயல்-இசை-நாடகம்இயல்-இசை-நாடகம்-சாதனையாளர்கள்செய்திகள்தமிழ் செய்திகள்நாடகம்பொக்கிஷம்

பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் 105 வது பிறந்தநாள் விழா….!!!!

பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் 105 வது பிறந்தநாள் விழா….!!!!

வருடம்தோறும் நவம்பர் 29 அன்று வெகுவிமரிசையாக நடைபெறும் குணச்சித்திர நடிகரும், பாரதி கலைஞர் பட்டத்திற்குறியவருமான
எஸ். வி. சகஸ்ரநாமம் அவர்களின் நூற்றாண்டு நிகழ்வு இந்த ஆண்டு 105 வது பிறந்தநாளாக , பாரதிய ஜனதா கட்சியின் பண்பாளர் திரு. இல. கணேசன் அவர்கள் தலமையில் முன்னாள்
ஐ. ஏ. எஸ். திரு. G. ராமகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் சென்னை மைலாப்பூரில் விவேகானந்தா அரங்கில்நடைபெற்றது.நாடக, திரைப்பட நடிகர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள்,திறப்படகளைஞர்கள் என எங்கு திரும்பினாலும் கலையுலகமே திரண்டு வந்திருந்ததைப்பார்த்து தலமைப் பொறுப்பேற்றிருக்கும் திரு. இல. கணேசன் அவர்களே , பாரதிகலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாட இவ்வளவு கலைஞர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், அடுத்த ஆண்டு இன்னும் பெரிய அரங்கில் இந்த விழாவை நடத்த நாம் எல்லோருமே சேர்ந்து முயற்சி செய்வோம் என்று பெருமிதத்தோடு கூறிய அவர் தன் தலமைஉரையில் பாரதியாரின் மேல் மிகவும் ஈடுபாடு கொண்ட பாரதி கலைஞர் எஸ். வி. சகஸ்ரநாமம் அவர்கள் நாடகம் மூலமாக தேசபக்தி கலைஞராக விளங்கிய பெருமைகளையும் எட்டயபுரம் ராஜா முன்பாக அவ்வைஷண்முகம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.வி சகஸ்ரநாமம் போன்ற நடிகர்கள் அரண்மனையிலேயே ராஜாவின் குடும்பம் பார்ப்பதற்காக மட்டும் நடித்திருக்கிறார்கள் என்றார்.., இது எவ்வளவு பெரிய பாக்கியம்.

பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நாடகத்தை பெயர்மாற்றம் செய்து “கதரின்வெற்றி” என்று பெயர்சூட்டி ஆங்கிலேயர்களுக்கே தெரியாமல் அந்த நாடகத்தை மீண்டும் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள் என்றால் இந்த கலைஞர்கள் சுதந்திரத்திற்காக எப்படி எல்லாம் பாடுபட்டிருக்கிறார்கள் என்பதை என்னும்போது எனக்கு பெருமிதமாக இருக்கிறது என்றும்
பாரதி கலைஞர் எஸ்.வி. சகஸ்ரநாமம் அவர்கள் எழுதிய “திரும்பி பார்க்கிறேன்” என்ற அவரது சுயசரிதத்தை படித்து நான் வியந்துபோனேன் நீங்களும் அந்த புத்தகத்தை படித்துப்பாருங்கள் தேசபக்தி கலைஞர்கள் எல்லாம் இந்த தேசத்திற்காக எவ்வளவு பெரிய கலைவேலையை புரிந்திருக்கிறார்கள் என்பதை நீங்களும் தெரிந்துகொள்ளலாம் என்றார்.

முன்னிலை வகித்து பேசிய முன்னாள் IAS திரு. G. ராமகிருஷ்ணன்
அவர்கள் தன் மாமனாரே ஒரு மாபெரும் கலைஞர்…
அவர்தான் நடிகமணி டி. வி. நாராயணசாமி. அவரும் எஸ்.வி. எஸ் அவர்களும் நெருங்கிய நண்பர்கள். என் மாமனார் அவர்கள் கலைமாமணி விருது வழங்கும் இயல், இசை, நாடாகமன்றத்தின் செயலாளராக பதவி வகித்தவர். இந்த விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பை எனக்கு தந்த கலைமாமணி பி.ஆர். துரை அவர்களுக்கு எனது நன்றியையும் , பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

கலைமாமணி நடிகை பி. எஸ். சச்சு அவர்கள் ‘சிறந்த நாடக ஆசிரியர்கள் விருது’ பெற்ற நான்கு நாடக ஆசிரியர்களையும் வாழ்த்தி பேசினார். பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்,எஸ்.கே., போன்ற மாபெரும் மனிதர்களோடு நானும் நாடக உலகில் வலம்வந்தவள் என்றார்.
SVS நினைவாக சிறந்த நாடக ஆசிரியர்களாக ‘கலைக்களஞ்சியம்’ எனும் விருதை பெற்றவர்கள் திரு. அகஸ்டோ, திரு. சந்திரமோகன் , திரு. அறிவானந்தம் மற்றும் திரு. ஸ்ரீவத்சன் ஆகியோர்..

ஸ்ரீமதி.லக்ஷ்மி கிருஷ்ணசாமி அவர்களின் இறைவணக்கத்தோடு தொடங்கிய இந்த விழாவை நடத்திய எஸ்.வி. சகஸ்ரநாமம் அவர்களின் மகன் திரு. குமார்,, கலைமாமணி திரு. P.R. துரை இருவரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
SVS அவர்களை குறித்து திரைப்பட நடிகர் திரு. சார்லி அவர்களின் பேச்சு மிகச்சிறப்பு. பாலாஜி பெயண்ட்ஸ் கம்பெனியின் முதலாளி திரு. ராஜா அவர்களின் நன்றியுரையுடன் விழா மிகவும் சிறப்பாக நிறைவடைந்தது.

 

 

Tags
Show More

Related Articles

Close