சூப்பர் ஸ்டாருக்கு சகோதரியாக நடிக்கும் சுஹாசினி…!!

சூப்பர் ஸ்டாருக்கு சகோதரியாக நடிக்கும் சுஹாசினி…!!

சூப்பர் ஸ்டாருக்கு சகோதரியாக நடிக்கும் சுஹாசினி..!! திரையுலகைப் பொறுத்தவரை ஒரு நடிகை, பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்திவிட்டு அதன் பின்னர் அதே நடிகருக்கு அக்காவும் அம்மாவும் நடிப்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம் இல்லை. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பல நடிகைகள் பின்னாளில் அம்மாவாகவும் அக்காவாகவும் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நடிகை சுகாசினி பிரபல நடிகர் ஒருவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நிலையில் தற்போது அவருக்கு சகோதரியாக நடிக்கும் தகவல் வெளிவந்துள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ’லூசிஃபர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழில் அஜித்தை வைத்து ரீமேக் செய்ய இருப்பதாக ஒரு வதந்தி உலாவி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் சிரஞ்சீவியின் சகோதரி வேடத்தில் நடிக்க சுகாசினியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மலையாள லூசிஃபர் படத்தில் மோகன்லாலின் சகோதரியாக மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில் தான் சுகாசினி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த கேரக்டரில் நடிக்க விஜய்சாந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் ஆனால் தற்போது அந்த படத்தில் சுகாசினி நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.கடந்து 90களில் சிரஞ்சீவி மற்றும் சுகாசினி ஆகிய இருவரும் ஜோடியாக நடித்த பல தெலுங்கு திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகின என்பதும், இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவிக்கு சகோதரியாக சுகாசினி நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS