தியாகராஜ பாகவதர் குடும்பத்திற்கு நிதிஉதவி ..!!

தியாகராஜ பாகவதர் குடும்பத்திற்கு நிதிஉதவி ..!!

தியாகராஜ பாகவதர் குடும்பத்திற்கு நிதிஉதவி ..!!
தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர். ‘இந்து நேசன்’ பத்திரிகை ஆசிரியர் லக்ஷ்மிகாந்தன் கொலை  தொடர்பான வழக்கு விவகாரத்திற்குப் பின் அவரது சினிமா அந்தஸ்து படிப்படியாக இறங்கியது. பார்வை குறைந்து அவதிப்பட்டார். அவர் காலமானபின் அவரது குடும்பம் சிரமப்பட்டது. அப்போது, தமிழக முதல்வராக இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அவர் குடும்பத்திற்கு பல்வேறு உதவிகளைச்செய்தார்.
இப்போது மீண்டும் பாகவதர் குடும்பத்தினர் சிரம திசையில் இருப்பதை அறிந்து கொண்டு பால்வளத்துறை அமைச்சர்

திரு. கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள் எம்.கே. தியாகராஜ பாகவதர்
குடும்பத்தார்களை அழைத்து ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி  அளித்துள்ளார்.அமைச்சரின் இந்த இனிய சேவையை மனதாரப் பாராட்டுவோம். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS