விமர்சனம்
வன்முறைப்பகுதி-சினிமாவிமர்சனம்..!!

வன்முறைப்பகுதி-சினிமாவிமர்சனம்..!!
முழுக்க முழுக்க கிராமத்திலேயே எடுக்கப்பட்ட யதார்த்தமான கிராமத்தில் நடக்கும் கதை.பெரியப்பா-சித்தப்பா வீட்டுசண்டையில் அவரது வாரிசுகள் ஜென்மப்பகையாக வெட்டு..குத்து..கொலை..என்று அலைகிறார்கள்.இவர்களைப்போல்
ஊருக்கே அடங்காத..குட்டி..கும்மாளம்…அடிதடி..வெட்டு..குத்து…என்று அலைந்து திரியும் இளைஞனும்தான்
படத்தின் முக்கிய புள்ளிகள்.
நாயகன் மணிகண்டன் வேலைக்கு ஏதுவும் செல்லாமல் குடித்துவிட்டு ஊதாறித்தனமாக ஊர் சுற்றி வருகிறார். ஊருக்குள் எந்த பிரச்சனை என்றாலும், மணிகண்டன் தான் காரணம் என்னும் அளவுக்கு ஊரில் நல்ல பெயரை சம்பாதித்திருக்கிறார். அவருக்கு திருமணம் செய்து வைத்தால் பிரச்சனைகளுக்கு போக மாட்டார் என்று மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர்.
இவரது முன்கோபம் மற்றும் அடிக்கடி பிரச்சனைகளுக்கு போவதால் உள்ளூரில் அவருக்கு பெண்கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து மணிகண்டன் வீட்டிற்கு பக்கத்தில் குடியிருக்கும் பெண் ஒருவரின் சொந்தக்கார பெண்ணான நாயகி ரஃபியாஜாபரை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறார்கள். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது.
ரஃபியாஜாபருக்கு இரு அண்ணன்கள். சொத்து தகராறில் தனது அப்பாவை கொலை செய்த சித்தப்பாவை வெட்டிவிட்டு இருவரும் ஜெயிலுக்கு செல்கிறார்கள்.
இதற்கிடையே திருமணத்துக்காக காத்திருக்கும் இருவரும் மனதில் ஆசையை வளர்த்து காதலிக்க தொடங்குகின்றனர். ஆனால் திருமணம் நெருங்கும் வேளையில் மணிகண்டன் குணம் பற்றி பெண் வீட்டாருக்கு தெரியவர திருமணம் நிறுத்தப்படுகிறது. தடைபட்ட திருமணம் நடந்ததா? மணிகண்டனின் முன்கோப குணம் அவருக்கு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது? என்பதே படத்தின் மீதிக்கதை…!

மிகக் குறைவான பட்ஜெட்டில் , அறிமுக இயக்குநர் நாகா எனும் நாகராஜ் படத்தை எடுத்த விதம் அற்புதம்.முனியசாமியாக மணிகண்டனும், சகோதரர்கள் சன்னாசி, வேலுவாக NSK.J.மனோகராவும், ராஜாவும், நாயகி தவமணியாக ரஃபியா ஜாஃபரும் நடித்துள்ளனர். கதாநாயகனின் அம்மா சின்னத்தாயாக திண்டுக்கல் தனம், நாயகியின் அம்மா ‘உசிலை’ பாண்டியம்மாளும், சிவராமன் போன்ற கதாபாத்திரங்கள் அத்தனை பேருமே பிரமாதமாக நடித்துள்ளனர்.
மொத்தத்தில் `வன்முறைப்பகுதி’யை கலவரமில்லாமல் சென்று பார்க்கலாம்.
இயக்குனர் நாகராஜ் சினிமாத்தனம் இல்லாமல் கிராமத்து மனிதர்களை மேக்கப் இல்லாமல் இயல்பாகவே படம் பிடித்து அசத்தி இருக்கிறார். திரைக்கதையும் எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாமல் விறுவிறுப்பாக செல்கிறது.கதாநாயகனும்..எதிர் கோஷ்டிகளும்
கிளைமாக்ஸ்க் காட்சில் ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக்
கொள்ளும் காட்சியும்…காவல் துறையினர் முட்டாள்கள் அல்ல என்பதையும் காட்சிப்படுத்திய விதம் வெகு ஜோர்.
கிளைமாக்ஸ்க் காட்சில் ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக்
கொள்ளும் காட்சியும்…காவல் துறையினர் முட்டாள்கள் அல்ல என்பதையும் காட்சிப்படுத்திய விதம் வெகு ஜோர்.