விமர்சனம்

வந்தா ராஜாவாதான் வருவேன்-சினிமா விமர்சனம்..!!

வந்தா ராஜாவாதான் வருவேன்-சினிமாவிமர்சனம்..!!

வெளிநாட்டில் மிகப்பெரிய தொழிலதிபரான நாசரின் மகன் சுமன்., மகள்
ரம்யா கிருஷ்ணன் .இவர் பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஒரு சாதாரண வழக்கறிஞரை திருமணம் செய்து கொள்வதால் அவர்களை ஏற்றுக்கொள்ளாத நாசர் பிரபுவை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். பின்னர் ரம்யா கிருஷ்ணன் பிரபுவை அழைத்துக் கொண்டு இந்தியா வருகிறார். தனது தவறை நினைத்து தினம்தினம் வருத்தப்படும் நாசர், தனது மகள் ரம்யா கிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதனை தனது பேரனான சிம்புவிடம் சொல்கிறார்.
இவ்வளவு பணம் இருந்தும், தாத்தா நிம்மதியாக இல்லை என்பதை உணரும் சிம்பு, இந்தியா வருகிறார். இந்தியாவில் பெரிய பணக்காரராக இருக்கிறார் பிரபு. கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ் பிரபுவின் மகள்கள். பிரபுவின் அபிமானத்தை பெற்று அவர்களது வீட்டில் வேலைக்கு சேரும் சிம்புவுக்கு மேகா ஆகாஷ் மீது காதல் வருகிறது.
கடைசியில், சிம்பு ரம்யா கிருஷ்ணனின் மனதை மாற்றி தன்னுடன் அழைத்துச் சென்றாரா? தனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றி வைத்தாரா? அத்தை பெண்ணை கரம்பிடித்து ராஜாவாக வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

படத்தில் சிம்பு தனது ஸ்டைல், பஞ்ச் வசனங்கள், நகைச்சுவை என அனைத்திலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்..அழுத்தமான கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் கைதட்டலை வாங்குகிறார். படையப்பா படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் தனது நடிப்பால் மிரள வைக்கிறார். பிரபு,ராதாரவி,நாசர் மூவரும் தங்களது
கதாபாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். யோகி பாபு, ரோபோ ஷங்கர் விடிவி.கணேஷ் ,மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே கதை நகர்வதற்கு உதவியிருக்கிறார்கள்.

 

பாக்யராஜ்தனது படங்களில் தன்னை மட்டம் தட்டி பேசிக்கொள்வது,மற்றவர்களை
கிண்டல் செய்யச்சொல்லி காட்சிகளை அமைப்பது என்று வைத்து ரசிகர்களிடம் கைத்தட்டல்களைப் பெறுவார்.அதேபோல் இந்தப்படத்தில்
சிம்பு கையாண்டிருக்கிறார்.இந்த விஷயத்தில் சிம்புவைத் தவிர
வசனம் எழுதிய செல்வபாரதி,காட்சிகளை அமைத்த சுந்தர்.சி.ஆகியோர்களையும் பாராட்ட வேண்டும்.தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ படம் என்றாலும், ரீமேக் மூலமும் சுந்தர்.சி தனது திறமையை நிரூபித்திருக்கிறார். தனது பாணியில் காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். என்.பி.ஸ்ரீகாந்த்தின் படத்தொகுப்பில்,கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில்,ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில்
காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. .

மொத்தத்தில்…சிம்பு ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான படம்.

Tags
Show More

Related Articles

Close