பழம்பெரும் பின்னணி   பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்…!!

பழம்பெரும் பின்னணி  பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்…!!

பழம்பெரும் பின்னணி 

பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்…!!

தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர் ஏ.எல்.ராகவன். 1950-களில் இருந்து 1970 வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம் ஆவார்.ஏ. எல். இராகவன் 1947 ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு சுதர்ஸன் படத்தில் கண்ணனாக நடித்தார். 1950 ஆம் ஆண்டு வெளியான விஜயகுமாரி திரைப்படத்தில் குமாரி கமலாவுக்காக பெண்னா குரலில் பாடி பாடகராக அறிமுகமார்.

பிரபல பின்னணிப்

பாடகர் டி.எம். சௌந்தர்ராஜனுடன் இணைந்து கல்லும் கனியாகும் என்ற படத்தை தயாரித்தார்.

ஏ.எல்.ராகவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்

19-6-2020-அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

இவர் பாடிய காலத்தால் அழியாத சில சிறந்த பாடல்களாவன, எங்கிருந்தாலும் வாழ்க, சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து, பொம்பளை ஒருத்தி இருந்தாளாம் உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் கடைசியாக ஆடாம ஜெயிச்சோமடா என்கிற படத்தில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

சில டிவி செய்திகளில்ஏ.எல்.ராகவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக தவறான
தகவல்களைக்கூறி ஏ.எல்.ராகவனின் குடும்பத்தினர்களை
மன வேதனைக்குள்ளாக்கி விட்டனர்.அவசர அவசரமாக செய்திகளை முந்தித்தருகிறோம் என்ற பெயரில் மீடியாக்களின் பெயர்களை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்….சில அரைவேக்காட்டு டிவிக்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS