நடிகர் விஷ்ணு விஷாலின் அடுத்த பட டைட்டில் வீடியோ ரிலீஸ்..!!

நடிகர் விஷ்ணு விஷாலின் அடுத்த பட டைட்டில் வீடியோ ரிலீஸ்..!!

நடிகர் விஷ்ணு விஷாலின் அடுத்த பட டைட்டில் வீடியோ ரிலீஸ்…!!

கோலிவுட் திரையுலகின் இளம் ஹீரோக்களில் ஒருவராகிய விஷ்ணுவிஷால், தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்குவதாக இருந்தார். ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பை தொடங்குவதாக இருந்த அதே நாளில் இந்த படத்தின் டைட்டில் வீடியோவை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு ரசிகர்களின் அனுமதி வேண்டும் என்று கேட்டிருந்தார். ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்ததை அடுத்து சற்றுமுன் விஷ்ணுவிஷாலின் அடுத்த படம் குறித்த டைட்டில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘மோகந்தாஸ்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டைட்டில் வீடியோவே மிரட்டும் வகையில் இருக்கின்றது என்பதும் ’ராட்சசன்’ போல் இதுவொரு க்ரைம் ஸ்டோரி என்பதும் தெரிய வருகிறது.

முரளி கார்த்திக் இயக்கும் இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கவுள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில் கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/channel/UCARGpNFCP5SSgnIM8HYmg8A    https://www.youtube.com/watch?v=xmQPubkFnmw

CATEGORIES
TAGS
Share This

COMMENTS