செய்திகள்தமிழ் செய்திகள்

விக்ரம் பிரபுவின் ‘அசுர குரு’ ..!!

விக்ரம் பிரபுவின் ‘அசுர குரு’ ’ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது..!

 

 

அரசு திரைப்பட கல்லூரியில் தங்க பதக்கம் பெற்று  இயக்குநர் மோகன்ராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய  இயக்குநர் ராஜ்தீப் இயக்கி  வெளிவரயிருக்கும்  படம் ‘அசுர குரு’,படத்தின் தயாரிப்பாளர் J.S.B. சதீஷ்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும், மகிமா நம்பியார் நாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும், முக்கிய வேடங்களில் மனோபாலா, யோகி பாபு, ஜெகன், ராம்தாஸ்,  நாகி நீடு, சுப்புராஜ்,  குமரவேல்  ஆகியோரும் நடிக்கின்றனர். கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கும் இப்படத்திற்கு ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.

முதல் நாள் டப்பிங்கில் நாயகன் விக்ரம் பிரபு பேசிய வசனம் “மக்களை நான் காப்பாற்றுவேன்” என்பதுதான். இந்த வசனத்திற்கேற்றார்போல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.

இயக்குநர் ராஜதீப் தமிழக அரசின் சிறந்த குறும் பட இயக்குநருக்கான விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Tags
Show More

Related Articles

Close