இப்போ டேட்டிங் செய்கிறோம்…. விஷ்ணு விஷாலின் காதலி பேட்டி..!!

இப்போ டேட்டிங் செய்கிறோம்…. விஷ்ணு விஷாலின் காதலி பேட்டி..!!

இப்போ டேட்டிங் செய்கிறோம்….  – விஷ்ணு விஷாலின் காதலி பேட்டி..!

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஷ்ணுவிஷால் 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.ஆனால் இருவரும் அதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர். இந்நிலையில் ஜுவாலா கட்டா சமீபத்திய பேட்டியில் தனது காதல் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: நாங்கள் டேட்டிங் செய்து வருவது உண்மைதான். நான் ஏற்கனவே சொன்னது போல, இதில் மறைக்க வேண்டியது ஏதுமில்லை. நாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறோம். தேதி முடிவானதும் அறிவிப்போம். இதுபற்றி மேலும் தெரிவிக்க ஏதும் இல்லை’ என்று கூறியுள்ளார். திருமணம் பற்றி விஷ்ணு விஷால், ஏதும் தெரிவிக்காத நிலையில், ஜுவாலா கட்டா பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS