
நடிப்பில் இருந்து விலகுகிறாரா விக்ரம் ?
நடிப்பில் இருந்து விலகுகிறாரா விக்ரம்..?
மகன் துருவ்வின் வளர்ச்சிக்காக நடிகர் விக்ரம் சினிமாவிலிருந்து விலகப் போகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.
இதுகுறித்து விக்ரம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:—–
இந்த செய்தியைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது என்பதை இதன்மூலம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.விக்ரம் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார், அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்துடன் ஒரு படத்திலும் நடிக்கிறார். அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார், மேற்சொன்னவை அவரது படங்களில் ஒரு சிலவை மட்டுமே.
எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் சரிபார்த்து தெளிவுபடுத்துமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
TAGS Vikram-statement-about-rumor...Will Vikram quit acting?-Will Vikram quit acting?-Vikram-statement-about-rumor.